Saif Ali Khan (Photo Credit: Instagram)

ஜனவரி 16, பாந்த்ரா (Cinema News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா, மேற்கு சதகுரு சரண் பகுதியில் நடிகர் சைப் அலிகான் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கரீனா கபூர், மகன்கள் தைமூர் (வயது 8), கெஜ் (வயது 4) ஆகியோருடன் இருக்கிறார். மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இவர்களுடன் தங்கி இருக்கிறார்கள். இதனிடையே, நேற்று நள்ளிரவு சுமார் 02:30 மணியளவில், இவர்களின் வீட்டினுள் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் ஒருவர், நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின் அவர் தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது. Bigg Boss Tamil Season 8: பணப்பெட்டி எடுக்க புயல் வேகத்தில் ஓடிய ரயான்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்..!

காவல்துறையினர் விசாரணை:

கத்திக்குத்து காயத்தால் பாதிக்கப்பட்ட சைப் அலிகானை மீட்ட குடும்பத்தினர், விரைந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபருக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சைப் அலிகான்: