Sankashti Chaturthi 2025 (Photo Credit: Instagram)

ஜனவரி 17, சென்னை (Chennai News): ஒவ்வொரு மாதமும் விநாயகரின் நினைவாக கொண்டாடப்படும் சங்கடஹர சதுர்த்தி, சங்கஷ்டி சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சதுர்த்தி திதியாக இந்து நாட்காட்டியில் குறிப்பிடப்படும் சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ கட்டிடத்தின் நான்காவது நாளில் ஒவ்வொரு மாதமும் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்துக்களின் வீட்டிலும் சிறப்பிக்கப்படும் சங்கஷ்டி சதுர்த்தி, 17 ஜனவரி 2025 அன்று சிறப்பிக்கப்படுகிறது.

வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்:

இன்றைய நாளில் சூரியன் காலை 07:14 மணிக்கு உதித்து, அஸ்தனம் மாலை 05:59 மணிக்கு இருக்கும். சந்திரன் இரவில் 09:18 மணிக்கு இருக்கலாம். சதுர்த்தி திதி இன்று அதிகாலை 04:06 மணிக்கு தொடங்கி, மறுநாளில் காலை 05:30 வரையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகரை போற்றி கொண்டாடப்படும் சதுர்த்தி திதி, அன்று விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்துடன் இந்த நாளுக்கான வாழ்த்துச் செய்திகளும் உங்களுடன் இணைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி திதியில் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து நீங்கள் உங்களின் விரத முறைகளை தொடரலாம். Agriculture Tips: விவசாயிகளுக்கு பயனளிக்க.. வட்டாரத்துக்கு, ஒரு வேளாண் விஞ்ஞானி.. விபரம் உள்ளே..!

1. விவேகம், வீரம், செழிப்பு கிடைத்து நலன்பெற சங்கடஹர சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

2. மகிழ்ச்சியை அருளும் சங்கடஹர சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

3. அமைதி, நிம்மதியுடன் முன்னேற்றம் கிடைக்க சங்கடஹர சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

4. தடைகளை தகர்க்கும் சங்கடஹர சதுர்த்தி நாளை கொண்டாடி, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம்!

5. வெற்றி, மகிழ்ச்சியை வழங்கும் இனிய சங்கடஹர சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

6. சங்கடஹர சதுர்த்தியில் உங்களின் பிரார்த்தனை வெற்றியடைய, இனிய சங்கடஹர சதுர்த்தி நல்வாழ்த்துகள்!