ஜனவரி 15, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் (Nagpur) சேர்ந்த சிறுமி, உளவியல் நிபுணர் (Psychologist) ராஜேஷ் மீது ஹட்கேஷ்வர் காவல்நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ராஜேஷ் பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தெரியவந்தது. Gang Rape Attempt: காதலனை தாக்கிவிட்டு, மாணவி கூட்டு பலாத்கார முயற்சி; 3 பேர் கும்பல் வெறிச்செயல்..!
பாலியல் தொல்லை:
உளவியல் நிபுணரான ராஜேஷ் (வயது 47), பண்டாரா, கோண்டியா போன்ற கிராமங்களில் தனிப்பட்ட மேம்பாட்டு முகாம்களை நடத்தியுள்ளார். அங்கு உளவியல் பிரச்சனைக்காக முகாம்களுக்கு வரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து அவர்கள் மிரட்டி வந்துள்ளார். திருமணம் ஆன பிறகும் மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல, கடந்த 15 ஆண்டுகளில் 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது.
உளவியல் நிபுணர் கைது:
இதனையடுத்து, ராஜேஷை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ், பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3