ஜனவரி 17, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 102 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், வெற்றியை நோக்கிய பயணத்தில் ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேறி இருக்கின்றனர்.
மணி டாஸ்க்:
பழைய போட்டியாளர்களை மீண்டும் இல்லத்திற்குள் அனுப்பி வைத்து, போட்டி மாறுபட்ட கோணத்தில் செல்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், மணி டாஸ்க் (Money Box Task Bigg Boss Tamil) முறையில் போட்டியாளர்கள் ஆட்டத்தை விறுவிறுப்புப்படுத்தியுள்ளனர். முத்துக்குமரன் பணப்பெட்டி தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதும், 15 நொடியில் 30 மீட்டர் தூரத்தை கடந்து ரூ.50000 பணத்தை முதற்கட்டமாக பெற்றார். அதனைத்தொடர்ந்து ரயான் ரூ.2 இலட்சம் பணப்பெட்டியை பெற்றுக்கொண்ட நிலையில், சௌந்தர்யா அம்முயற்சியை பாதியில் கைவிட்டு, பணத்தை எடுக்காமல் தனது இருப்பை வீட்டுக்குள் உறுதி செய்தார். விஜே விஷால் 60 மீட்டர் அளவிலான பணப்பெட்டிக்கு டார்கெட் வைத்துள்ளார்.ரூ.2 இலட்சம் பணப்பெட்டி டாஸ்கில் பவித்ரா, வெற்றி பெற்றார். அந்தவகையில் ஜாக்குலின் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். Vidamuyarchi Trailer: "கொஞ்ச நாளாவே என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிக்கிட்டு இருக்க" அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டிரைலர்.!
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் மகிழ்ச்சி, மோதல், நகைச்சுவை என அனைத்தையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை போட்டியாளர்கள் மத்தியில் போட்டுக் காண்பிக்கிறார்கள். வீடியோவை பார்த்த பிறகு 'பேசவே முடியல பிக்பாஸ்' என்று சௌந்தர்யா சொல்ல 'இதை விட என் வாழ்க்கையில என்ன கிடைச்சிறப்போகுதுனு தெரியலையே பிக் பாஸ்' என்று முத்துக்குமரன் சொல்கிறார். 'இதுதான் நான் இதை எப்படி நான் சொல்லி புரிய வைக்குறதுனு தெரியல'. என்று பவித்ரா சொல்ல 'முழுமையாக நான் எமோஷனில் இருக்கிறேன்' என்று விஷால் சொல்கிறார்.