ஜனவரி 16, வாஷிங்டன் (World News): அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப். இவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 4 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விழாவிற்கான அழைப்பு இந்தியாவிற்கும் வந்துள்ளது. டிரம்ப் பதவியேற்கும் நிகழ்வில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். இவருடன் சில இந்திய அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். Hindenburg Shuts Down: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடல்.. உச்சம் தொட்ட அதானி..!
விடைபெறும் பைடன்:
இன்னும் சில நாட்களில் விலக இருக்கும் ஜோ பைடன், புதன்கிழமை ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். உரையின் போது, "நான் நம் நாட்டின் மீது முழு அன்பை முழுமையாக அர்ப்பனித்துள்ளேன். அதற்கு கைமாறாக அமெரிக்க மக்களிடம் இருந்து பல லட்சம் முறை அன்பு, ஆதரவு கலந்த ஆசீர்வாதத்தை பெற்றுள்ளேன்," என்றார்.