ஜனவரி 17, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனே (Pune) அருகே நாராயன்கவுன் பகுதியில், கார், பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Vacation Turned Into A Nightmare: கழிவறையை எட்டிப் பார்த்த ஹோட்டல் உரிமையாளர்.. பயத்தில் ஓடி வந்த பெண்.!
9 பேர் விபத்தில் சிக்கி பலி:
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், லாரி ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியது தான் விபத்திற்கு (Accident) காரணம் என்பது தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. கார் நிலைதடுமாறி அந்த வழியாக வந்த பேருந்து மீது மோதியது. ஒரே நேரத்தில், கார், பேருந்து மற்றும் லாரி ஆகிய மூன்றும் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த 9 பேரும் காரில் பயணம் மேற்கொண்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.