Hindenburg (Photo Credit: Instagram)

ஜனவரி 16, மும்பை (Technology News): உலகளவில் மிகப்பெரிய தொழிலதிபர் கெளதம் அதானி (Gautam Adani). அதானி குழுமம் (Adani Groups) இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை வழங்கி தொழில் செய்து வரும் நிலையில், சமீபத்தில் செபி (SEBI) பங்குச்சந்தை விவகாரத்தில் சிக்கி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், கெளதம் அதானி (Adani News) மற்றும் 7 மூத்த நிர்வாகிகள் மீது அமெரிக்க நீதித்துறை சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

லஞ்சம் கொடுத்தது உறுதி:

அதாவது, ரூ.16,000 கோடி இலாபம் பெரும் வகையிலான சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தினை பெற, அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு மொத்தமாக ரூ.2,100 கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்ற கெளதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் உட்பட 7 பேரை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்து இருக்கிறது என கூறப்படுகிறது. TikTok Ban: அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலிக்கு தடை.. காரணம் என்ன?!

அன்றே கணித்த ஹிண்டன்பர்க்:

கடந்த 2020 - 2024 வரை சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க அதானி தனிப்பட்ட முறையில் சந்திப்புகள் நடத்தியதாகவும் பகீர் குற்றச்சாட்டு முன்வைப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசித்து வருகிறார்கள். கடந்த 2023ல் அதானியின் செயல்களை ஹிண்டன்பர்க் (Hindenburg Research) அறிக்கை ஊழல்களில் மிகப்பெரியது என கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் குற்றச்சாட்டு:

ஏற்கனவே அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தது ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம். அதானி குழுமம், கடந்த ஆண்டு ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை தொடர் பங்கு வெளியீடு மூலம் 20,000 கோடி திரட்ட தனது பங்குகளை குறைந்தபட்ச விலையாக ரூ.3112 எனவும், அதிகபட்ச விலையாக ரூ.3276 ஆகவும் நிர்ணயத்திருந்தது. அறிக்கை வெளியான நாளிலேயே அதானி குழுமத்தின் பங்குகள் 5% முதல் 8% வரை சரிவைக் கண்டது.

அமெரிக்கவிலுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய 103 பக்க ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனமாகும். அதானி நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து 85% அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. மேலும் அதானியின் அதிக கடன்கள் குறித்தும் பல்வேறு விதமான 88 கேள்விகளை மொத்தமாக முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 10 முதல் 20 மடங்கு உயர்ந்துள்ளது. அதீத கடன்கள் பற்றியும் மற்றும் அரசிடமிருந்து பல சலுகைகள் பற்றியும், பங்குசந்தையின் கட்டுப்பாட்டு அமைப்பான செபி இவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என அறிக்கையில் கேள்வி எழுப்பியது. TCS Hiring Alert: 40 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தும் டிசிஎஸ்.. வேலை தேடுபவர்களுக்கு அறிய வாய்ப்பு..!

இந்த அறிக்கை பற்றி கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், வேண்டுமென்றே, தொடர் பங்கு ஆரம்பிக்கப்போவதால் நிறுவனத்தின் மேல் உண்மைக்கு புறம்பான விஷயங்களை கூறி ஷார்ட் செல்லிங்கில் லாபம் பார்ப்பதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம் என தெரிவித்தனர். மேலும் இந்தியா அல்லது அமெரிக்காவில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை என தெரிவித்தது.

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன?

ஷார்ட் செல்லிங் நிறுவனம் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் விலை குறையும் என்று கருதி தம்மிடம் இல்லாத பங்குகளை விற்பனை செய்வது ஆகும். அதற்கு ஏற்ப அந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்தால் மீண்டும் அந்தப் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்க்க முடியும். இவ்வாறு பங்குகளை விற்று விலை குறையும்போது வாங்கி அதிக லாபம் பார்க்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹிட்டன்பர்க் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இதுவரை 30 நிறுவனங்களை பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆய்வறிக்கை வெளியான நாளிலேயே அந்த நிறுவனங்கள் 15% விலை குறைந்தது. அடுத்த 6 மாதங்களில் 26% குறைந்தது. அப்போது அதானி குழுமத்திற்கு எதிரான 2 ஆண்டுகளாக திரட்டப்பட்ட ஆய்வறிக்கை அதானி குழும முதலீட்டாளர்களைகளையும் இந்திய பங்குச் சந்தையையும் சற்று பயத்தில் ஆழ்த்தியது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடல்:

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கைகள் மூலம் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது, மட்டும் அல்லாமல் பெரும் நிதி இழப்புகளையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, நேட் ஆண்டர்சன் கூறுகையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை நடத்துவதற்கு அதிகப்படியான பணிகள் செய்ய வேண்டியுள்ளது, இதை தன்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்பதைக் காரணம் காட்டி தற்போது நிறுவனத்தை மூடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தை மூடும் முடிவு யாருடைய அச்சுறுத்தல் காரணமாகவோ, உடல்நல பிரச்சினை காரணமாகவோ அல்லது பிற தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்படவில்லை என்றும் நேட் ஆண்டர்சன் தெளிவுபடுத்தினார். நேதன் ஆண்டர்சனின் இந்த அறிவிப்பால், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மீண்டும் புதிய உச்சங்களைத் தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.