ஜனவரி 15, சென்னை (Kitchen Tips): வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அப்படியானால் சிக்கன் வைத்து சுவையான சிக்கன் ப்ரை செய்து சாப்பிடலாம். ஆனால், நீங்கள் செய்யும் சிக்கன் ப்ரை எதிர்பார்த்த சுவையில் இல்லையெனில், வீட்டிலேயே சிக்கன் ப்ரைக்கான அட்டகாசமான மசாலாவை செய்யலாம். கிராமத்து ஸ்டைலில் சிக்கன் ப்ரையை (Chicken Fry) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Mutton Biryani Recipe: வீட்டில் சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
மைதா - 4 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 இன்ச்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு, சிக்கனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக் கொள்ளவும்.
- பின், கழுவிய சிக்கனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகத் தூள், எலுமிச்சை சாறு, மைதா, அரிசி மாவு, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான, மொறுமொறுப்பான சிக்கன் ப்ரை ரெடி.