ஜனவரி 15, சென்னை (Kitchen Tips): ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், பண்டிகை காலத்திலும், அதன் தொடக்கத்தில் சைவ உணவுகளுக்கு அளிக்கப்படும் மதிப்புகளைப்போல, அசைவ விரும்பிகள் தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை ருசித்து சாப்பிடுவது இயல்பானது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் நிறைவில் பலரும் ஆடு, மீன், சிக்கன் என தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில், மணமணக்கும் வகையில் ஆட்டு குடல் குழம்பை (Kudal Kulambu) எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். Mutton Biryani Recipe: வீட்டில் சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்குடல் - 1/2 கிலோ
வெங்காயம் - 5
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
கருவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள், தனியா தூள் -1 டீஸ்பூன்
மட்டன் மசாலா -1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் -1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 மூடி
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும். பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். குடல் வெந்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். அவ்வளவு தான், ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி