WPL 2025 Logo (Photo Credit: Facebook)

ஜனவரி 17, மும்பை (Sports News): இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு நிகராக மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் (WPL 2025) கிரிக்கெட் தொடரை பிசிசிஐ (BCCI) கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை 2 சீசன்களை கடந்துள்ளது. இதன் மூன்றாவது சீசனை தற்போது நடக்கவுள்ளது. முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. INDW Vs IREW ODI: 304 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியடைந்த பெண்கள் கிரிக்கெட் அணி; இந்தியாவுக்கே பெருமை.!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3வது சீசனுக்கான போட்டி அட்டவணை:

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்ததன் காரணமாக 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலம் நடைபெற்றது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று (ஜனவரி 16) அறிவித்தது. அதன்படி, இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.

பிசிசிஐ அறிவிப்பு:

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியானது பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும், எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2025 போட்டி அட்டவணை: