Shahana Mumtaz`s death (Photo Credit: @OmmcomNews X)

ஜனவரி 15, மலப்புரம் (Kerala News): கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹானா மும்தாஜ் (19). இவர் கல்லூரியில் படிக்கும்போதே, அப்துல் வஹாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சஹானா நேற்று முன்தினம் தைப்பொங்கல் தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார். மகளின் இந்த முடிவுக்கு மருமகன் குடும்பத்தினரே காரணம் என்று சஹானா பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நிறத்தால் தீண்டாமை:

ஹானாவின் தோற்றம், நிறத்தை வைத்து, மாமியார் வீட்டில் எந்நேரமும் குறை சொல்லி உள்ளனர். ஆங்கிலம் பேச்சுத்திறனையும் காரணம் காட்டி, மனம்புண்படும்படியாக பேசிவந்துள்ளனர். மறுபுறம் கல்யாணமாகி 22 நாட்களில் அப்துல் வஹாப் அபுதாபிக்கு சென்று விட்டார். அவரும் எப்போதும் குறைகூறி வந்துள்ளார். அங்கு சென்ற பிறகு, சஹானாவுடன் (Shahana Mumtaz) போனில் பேசுவதைகூட தவிர்த்துள்ளார். பின்னர் தோற்றம், நிறத்தை வைத்து, குறுஞ்செய்தி வழியாக குறைகூறி வந்துள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான சஹானாவுக்கு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போயுள்ளது. EPFO Alert: இபிஎப்ஓ பெரும் நபர்களே - இன்றே இறுதிநாள்: மத்திய அரசு எச்சரிக்கை.!

சஹானா தற்கொலை:

அவருக்கு மன ஆலோசனை கொடுத்து, அவரது உடல்நிலை சற்று முன்னேற்றமடைந்த நிலையில் சஹானாவை அவரது குடும்பத்தினர் மறுபடியும் கணவர் வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர். அவர்களோ ஹானாவின் தோற்றம், நிறத்தை வைத்து, மாமியார் வீட்டில் எந்நேரமும் குறை சொல்லி உள்ளனர். மேலும் விவாகரத்து செய்யுமாறு கூறியுள்ளனர். இந்த சித்ரவதையை தாங்க முடியாமல், சஹானா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் (Shahana Mumtaz`s death) தொடர்பாக காவல்துறையினர் (Kerala Women`s Commission) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.