ஆகஸ்ட் 23, சென்னை (Technology News): உலகம் உள்ளங்கையில் (The World in the Palm of your Hand) என்ற வார்த்தை மெய்ப்பட்டு, தொழில்நுட்பத்தை நாம் தாராளமாக எங்கும் உபயோகம் செய்து வருகிறோம். இந்த தொழில்நுட்பம் (Technology) நமக்கு பல விதமான உதவிகளை செய்கிறது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது என அதன் சிறப்புகளையும், நன்மைகளும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இயற்கையின் (Nature) சாராம்சத்தை போல அது நமக்கு பல நன்மைகளை கொட்டிக்கொடுத்தாலும், தன்னை சமநிலைப்படுத்த தேவையான நடவடிக்கையும் எடுக்கும். அதனை பாதகம் என்று சொல்லிவிட முடியாது எனினும் (Advantages & Disadvantages of Technology), நமக்கு சொந்தமான உறவுகள் இயற்கையால் பாதிக்கப்படும்போது வலிக்கத்தான் செய்யும்.
அதேபோல, தொழில்நுட்பத்தில் சாதகங்கள் இருப்பதை போலவே பாதகங்களும் இருக்கின்றன. இவை அதனை உபயோகம் செய்யும் நபர்களை பொருத்தும், அவர்களின் எண்ணத்தை பொருத்தும் மாறுபடும். பெரும்பாலும் இங்கு பாதிக்கப்படுவது நம்பிக்கை வைத்து ஏமாறும் அப்பாவிகளே என்பது தான் நிதர்சனம். Trichy Girl Murder: வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட காதல் திருமணம் செய்த இளம்பெண் உடல்; கொலையாளிகள் யார்?.. திருச்சியில் பேரதிர்ச்சி.!
வாட்சப், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், கிளப்ஹவுஸ், ஸ்னாப்சாட், டெலகிராம் (WhatsApp, Facebook, Twitter, YouTube, Instagram, Club House, Snapchat, Telegram) என தொழில்நுட்ப செயலிகளை நாம் அதிகளவில் இன்றளவில் பயன்படுத்துகிறோம். இதில் சாட்டிங் (Chating Apps) செய்ய பயன்படும் வாட்சப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கிளப்ஹவுஸ் போன்ற செயலிகளின் வழியே நமக்கு பல புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். அதில் பல லிங்குகள் உலாவி வருகின்றன.
நமக்கு தேவையே இல்லை என்றாலும், நம்மை ஈர்க்கும் வகையிலான போலி விளம்பரங்கள் (Scam Advertisements) நிறைந்து கிடக்கிறது. இவற்றை நாம் அலட்சியமாக என்னும்போதுதான் விபரீதம் ஏற்படுகிறது. அதாவது, இணையதளத்தின் பயனை புரிந்து, நமது விபரங்களை தெரிந்துகொண்டு மோசடி செய்ய துடிக்கும் கும்பல்கள், போலியான லிங்குகளை பகிர்ந்து நமது தனிப்பட்ட தகவலை திருடுகிறது.
ஒருசில கும்பல் பெண்கள் / ஆண்களின் கணக்குகளை குறிவைத்து நட்பு அழைப்பை அனுப்பி காதல் (Online Love Scam) போர்வையில் ஏமாற்றுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் சல்லாப எண்ணம் கொண்ட ஆண்களின் விபரத்தை தெரிந்துகொண்டு, அவர்களை கச்சிதமாக தேர்ந்தெடுத்து ஆபாச வீடியோ கால் (Naked Video Call Chat Scam) பேசுவது போல பாவித்து பணம் பறிக்கிறது. இவ்வாறான குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. Joe Biden on India: “உலகிலேயே அமெரிக்காவுக்கு முக்கியமான நாடு இந்தியா” – இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரிடம் உரையாடிய ஜோ பைடன்.!
இவற்றை தடுக்க நாம் செய்யவேண்டியது மேற்கூறிய செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி அதனை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்து உள்நுழைய கூடாது. பேஸ்புக் போன்ற செயலிகளில் தற்போது வெளிநாடுகளில் வேலை பார்ப்பதாக நட்பு அழைப்பு விடுக்கப்பட்டு, பின் தான் உன்னை காதலிக்கிறேன் என பெண்களுக்கு வலைவிரிக்கப்டுகிறது.
பின் நாட்கள் சென்றதும் வெளிநாட்டில் இருந்து பரிசு அனுப்பி இருக்கிறேன், அதனை பெற குறிப்பிட்ட தொகையை இந்திய அரசிடம் வாரியாக செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசுவதை போல நடித்து, தன் மீதான நம்பிக்கையை பணமாக பெற்று மனதளவில் வலிகளை தந்து நூதன வழிப்பறி செய்யும் கும்பலின் சேட்டைகள் தொடருகிறது.
இவற்றை தவிர்க்க நமக்கு வந்த நட்பு அழைப்பின் பின்னணியில் இருப்பவரை பற்றி எந்த விஷயமும் தெரியாமல், பரிசு அனுப்பியிருக்கிறார் என ஆவலில் யாருக்கும் பணம் அனுப்ப கூடாது. தங்களை ஆபாசமாக படமெடுத்தோ, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தோ மிரட்டினால், எவ்வித தயக்கமும் இன்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். Pragnanandha enters Final: உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைக்கிறார் பிரக்ஞானந்தா: குவியும் தலைவர்களின் வாழ்த்துக்கள்.!
ஒருவேளை பணத்தை இழந்துவிடும் பட்சத்தில், 24 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்டுத்தர வாய்ப்புகளும் அதிகம். நேரம் செல்லச்செல்ல பணம் மீட்க இயலாது. இவ்வாறான கும்பலை தடுக்க அரசும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு வாயிலாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தாலும், நமது விழிப்புணர்வு என்பது அவசியம்.
முந்தைய காலங்களில் வங்கிகளில் இருந்து தொடர்பு கொள்வதை போல பேசி ஏ.டி.எம் நம்பர், ஓ.டி.பி ஆகியவற்றை நமது வாயிலிருந்தே பெற்று பணத்தை பறித்து வந்த நிலையில், இன்றளவில் தொழில்நுட்ப ரீதியாக நன்கு விபரங்களை கற்றுக்கொண்டு மோசடி செய்கிறது. ஆகையால், தொழில்நுட்ப உலகில் முடிந்தளவு நமது விபரங்களை பாதுகாத்துக்கொள்வது நமது கடமையாகவும் மாறியுள்ளது. அலட்சியமாக இருந்தால் இழப்பு நமக்கே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நம்மை நம்பி உள்ளூர்காரர் கடன் தரமாட்டார். ஆனால், ஆன்லைனில் உள்ள லோன் செயலிகள் ஆயிரக்கணக்கில் இருந்து இலட்சக்கணக்கில் வரை கடன் தரும். ஆனால், அதன் ஒருநாள் வட்டி கணக்கீடு ரூ.500 முதல் ரூ.1000 வரை செல்லும். இந்த கந்துவட்டி விபரங்கள் எதுவும் முதலில் தெரிவிக்கப்படாது. Ulundhu Soru Preparation: பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் உளுந்தஞ்சோறு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
அவசரத்திற்கு என ரூ.1000 பணம் வாங்க நீங்கள் ஆன்லைனுக்கு வந்தால், மறுநாளே அதை செலுத்தினாலும் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும் என வரும். மாறாக தவறினால், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே நமது தனிப்பட்ட தகவலை பகிர நாம் அனுமதி கொடுத்துவிடுவதால், நமது தகவல்கள் திருடப்பட்டு அவர்களால் உபயோகம் செய்யப்படும். நண்பர்கள் & உறவினர்களுக்கு தொடர்புகொள்வதாக மிரட்டுவார்கள், புகைப்படங்கள் கிடைத்தால் மாபிங் செய்தும் அனுப்புவார்கள்.
ஆன்லைன் விவகாரத்தில் சிந்தித்து செயல்படுவது சாலச்சிறந்தது. இவை குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு நபரும் தங்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினாலே, அவை தொடர்பான குற்றங்களை குறைத்திடலாம். ஆனால், குடும்பத்திடம் பேச நேரமில்லாது ஓடவைக்கும் உலகத்தின் கட்டாயத்தில், 2 நிமிடம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒதுக்கலாம். தேவையான விழிப்புணர்வு இல்லாததே, பல மோசடிகளுக்கு மூலக்காரணமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை மாலதி என்பவரிடம், முகநூல் வழியே இலண்டனை சேர்ந்தவர் என கூறி அறிமுகமான மர்ம நபர், பரிசு அனுப்பியுள்ளதாக கூறி ரூ.15 இலட்சம் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியை இன்று மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.