Template: Zhangye Danxia Geopark China, Venice Italy, Japan Cherry blossom Season Mamallapuram, Tamilnadu

டிசம்பர், 9: மனிதராக பிறந்த நாம் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்களை குளிர்விக்கும் அல்லது மனதை இதப்படுத்தும் இடங்களுக்கு சென்று வரலாம் என்று எண்ணுவோம். இன்றுள்ள திரைப்படங்களில் மக்களுக்கு அவ்வாறான இயற்கை (Nature Places) எழில் சூழ்ந்த இடங்கள் பாடல் காட்சிகளில் இடம்பெறுகிறது. அவ்வழகை திரையில் கண்டு ரசித்தாலும், நேரில் காணும் போது அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த வகையில், உலகளவில் பார்க்க வேண்டிய பட்டியலில் தலைசிறந்தவை குறித்து இன்று காணலாம்.

ஜாங்யே டேனிக்சியா ஜியோ பார்க், சீனா (Zhangye Danxia Geopark, China): புவியியல் ஆர்வலர்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் ரெயின்போ மலை உலகளவில் கவனிக்கப்படும் சிறந்த இடங்களில் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக மலைபோல குவிந்த வண்டல் தாதுபடிமங்களில் ஏற்பட்ட வண்ண நிறமாற்றத்தினால் கண்களால் பார்க்க வானவில் போர்த்திய மலைகள் போல எழில் பெறுகிறது. இந்த நிறங்களில் சிவப்பு, மஞ்சள் & ஆரஞ்சுகளில் பார்ப்பது அரிதான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வினிஸ், இத்தாலி (Venice, Italy): சிறிய அளவிலான கைப்படகுடன் கால்வாயில் கடந்து செல்லும் நேரங்கள் மனதுக்கு எழிலை தருகிறது. நடைபாதை இல்லாமல் நீருக்கு மேல் படகின் உதவியுடன் அமைதியாக பயணிப்பது, வளைந்த பாலங்களை கண்டு ரசிப்பது என மிதக்கும் காதல் நகரமாக இருக்கும் வெனிஸ் சுற்றுலாவுக்கு உகந்த அழகிய நகரம் ஆகும்.

Venice ItalyVenice Italy

பாண்ப் தேசிய பூங்கா, கனடா (Banff National Park, Canada): கனடா நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் பனிப்பாறை ஏரியில் நீளமான நீர்கொண்ட பாண்ப் தேசிய பூங்காவின் பேர்மாண்ட் சாடோ ஏரி ஆடம்பர ஏரி என்றும் அழைக்கப்படும். இங்குள்ள அழகை ஏரிக்கரையில் இருக்கும் விடுதியில் தங்கியிருந்தவாறு அழகாக கண்டு களிக்கலாம்.

கிரேட் கடற்கரை சாலை, ஆஸ்திரேலியா (Great Ocean Road, Australia): அப்போஸ்தலர் பாறைகள் அமைப்பில் எஞ்சிய பகுதிகளாக சிதைந்து காணப்படும் பாறைக்கூட்டங்கள் ஆஸ்திரேலியாவின் கிரேட் ஓட்வே பூங்காவில் இருக்கின்றன. கடற்கரை நகரமான லோர்ன் நகரின் அழகை காண அது வியப்பை ஏற்படுத்தும். Women Health Tips: அச்சச்சோ.. பெண்கள் உறங்கவில்லை என்றால் இவ்வுளவு பேராபத்துகளா?..! பதறவைக்கும் தகவல்.. பெண்களே உஷார்.!! 

மன்சு பிச்சு (Machu Picchu): கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில், மூச்சை திணறச்செய்யும் இடத்தில இருக்கும் பிரமிக்கவைக்கும் கட்டிடகளை பாரம்பரியம் மிக்க தலமாகும். இது பெருவில் இருக்கிறது. பரந்த மலையின் மீது விஞ்ஞானிகள் முதல் சாமானியர்கள் வரை என ஒவ்வொருவரையும் வியக்கவைக்கும் இடமாக மன்சு பிச்சு அமைந்துள்ளது. இந்த படத்தை எந்திரனின் மொகஞ்சதாரோ பாடலில் நாம் காணலாம்.

பாமுக்களே, துருக்கி (Pamukkale, Turkey): துருக்கியில் உள்ள பாமுக்களேவில் இயற்கையாக காணப்படும் வெள்ளை வெந்நீரூற்று காண்போரை வியக்க வைக்கும் இடமாகும். இது இடிபாடுகளில் தாயகம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்டாலும், அடுக்கடுக்காக இயற்கையாக அமைந்த நீர் சுனைகளை கண்டுகளிக்கலாம்.

Pamukkale Turkey
Pamukkale,, Turkey.

ஜெரி பூ சீசன், ஜப்பான் (Japan in Cherry Blossom Season): ஜப்பான் நாடு ஆண்டு முழுவதிலும் அழகுடன் இருந்தாலும், அதன் வசந்த காலங்களில் பார்க்கும் இடமெல்லா இருக்கும் செர்ரி மரங்களை பூக்கள் வெடித்து ரோஸ் நிறத்தில் இருக்கும். இதனை நேரில் கண்டால் மனதுக்கு அவ்வுளவு இனிமையாக இருக்கும். இது ஜப்பானின் வசந்த காலங்களில் மட்டுமே காணக்கூடியது ஆகும்.

தமிழ்நாடு, இந்தியா (Tamil Nadu, India): இந்தியாவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் முகலாய அரண்மனை மட்டும் கோட்டைகளுக்கு சென்று வருகிறார்கள். ஆனால், தென்னிந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு கோவில்களுக்கும், அதன் அழகிய சிற்ப கலைகளுக்கும் புகழ்பெற்றது ஆகும். மகாபலிபுரத்தில் இருக்கும் பல்லவர்களின் குடவரை கோவில், ஸ்ரீரங்கம் இரங்கநாதஸ்வாமி கோவில் உட்பட பல கோவில்களின் கட்டிட கலைகள் விரும்பப்படுகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 11:22 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).