டிசம்பர், 11: அசைவ வகை உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட விரும்பும் நபர்கள், தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஐந்து விஷயங்களை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். இவை ஊட்டச்சத்துக்களை (Stamina) பெறுவதற்கு வழிவகை செய்யும்.

உலர் பழங்களில் ஊட்டச்சத்தாக இரும்பு சத்து (Iron Mineral) நிறைந்துள்ளது. மாடனைப்போல தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவையும் உள்ளன. உலர் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது. பச்சை இலை காய்கறிகளில் இரும்புசத்து என்பது நிரம்பி உள்ளது. Chinna Vengayam: சிறிய வெங்காயத்தில் இவ்வுளவு நோய்களுக்கு மருந்தா?.. அசரவைக்கும் உண்மை.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.! 

போலிக் அமிலம், வைட்டமின் ஏ, கால்சியம் போன்றவைகளும் இருக்கின்றன. கீரைகளில் இருக்கும் அண்டி-ஆக்சிடண்டுகள் புற்றுநோயை (Fight Against Cancer) எதிர்க்கும் வல்லமை கொண்டது ஆகும். நார்சத்து, துத்தநாகம் போன்றவை தானியங்களில் இருக்கின்றன. இவை கொழுப்பு சத்து உடலில் சேருவதை எதிர்த்து போரிடும்.

பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயின் அபாயத்தையும் வெகுவாக குறைக்கும். கரையும் நார்சத்து கொண்ட பருப்பில் புரதமும், இரும்பு சத்தும் உள்ளன. பீன்ஸில் இருக்கும் இரும்பு, புரதம், நார்சத்து போன்றவை உடலில் இருக்கும் கொழுப்புகளை எதிர்த்து போராடும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 05:30 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).