ஆகஸ்ட் 01, சென்னை (Refrigerator Tips): இன்றளவில் ஒவ்வொரு வீட்டிலும் ஏசி, பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின் என எலக்ட்ரானிக் பொருட்கள் குவிந்து வருகின்றன. இவற்றை வாங்கும் பலரும் சரிவர பராமரிப்பு செய்வது இல்லை. இன்று பிரிட்ஜை பராமரிப்பது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
பிரிட்ஜை நாம் வாங்கியதில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தனது பயனை தருகிறது. இதனை சரியாக பராமரித்தால் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். பிரிட்ஜின் பின்புறம் இருக்கும் வலைபோன்ற கம்பி அமைப்பு எப்போதும் சுவரை ஒட்டியபடி இருக்கக்கூடாது.
இந்த கம்பியில் தண்ணீரும் படக்கூடாது. இக்கம்பியில் இருக்கும் தூசியை அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை பிரஸ் கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். வெளியூருக்கு செல்லும் நேரங்களில் பிரிட்ஜை ஆப் செய்துவிட்டு செல்லலாம்.
அதேபோல, வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டால் பிரிட்ஜை ஆப் செய்து துடைத்து காயவைத்து செல்லலாம். இதனால் ஈரம் காயாமல் பிரிட்ஜுக்குள் பூஞ்சை ஏற்படுவது தவிர்க்கப்படும். Chennai Encounter: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் சென்னையில் என்கவுண்டர்; உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த கும்பலுக்கு தடாலடி.!
பிரீஜரில் இருக்கும் குளிர்நிலை காரணமாக, அதில் வைக்கப்படும் பொருட்களை அவ்வப்போது எடுக்க வேண்டும். பிரீஜரின் தன்மையை சரியாக மேற்கொள்ள, அவ்வப்போது அதனை செயற்கையாக உருகி ஓடவைக்க கொடுக்கப்பட்ட அமைப்பை பயன்படுத்த வேண்டும்.
டம்ப்ளர் நீரில் தண்ணீர், வினிகர், எலுமிச்சை சாறு, சோடா உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து, துணியால் பிரிட்ஜை துடைக்கலாம். இவை பிரிட்ஜில் உள்ள அழுகுரலை நீக்கும். இம்முறையை மாதம் ஒருமுறை செய்யலாம்.
6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜின் மின்சாதனம் சரியாக வேலை செய்கிறதா? என்பதை கண்காணித்தல் நல்லது. பிரிட்ஜை எதோ ஒரு காரணத்திற்காக ஆப் செய்யும்போது, அதனை மீண்டும் 3 நிமிடம் அல்லது 5 நிமிடம் கழித்து ஆன் செய்ய வேண்டும். அதேபோல, வீட்டின் எர்த் கனெக்சனையும் சரியாக சோதிக்க வேண்டும்.
பிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, அதனுள் புதினா இலைகளை உபயோகம் செய்யலாம். அதிக ஸ்டார் உள்ள பிரிட்ஜை தேர்வு செய்வது நல்லது.