Lips Beauty (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 11, ஆரோக்கியம் (Health Tips): கோடை மற்றும் குளிர்காலத்தில் நமது உதடுகள் இயற்கையாக வறட்சியை சந்திக்கும். இதனால் சிலருக்கு உதடு பகுதியில் வெடித்து காயமும் ஏற்படும். கடுமையான வெயில் நிலவும்போது உதட்டில் இருக்கும் செல்கள் இறந்து, உதடுகள் காய்ந்து கருப்பு நிறமாகும்.

அழகு விஷயத்தில் கவனமாக இருக்கும் பெண்கள், தங்களின் உதட்டையும் பராமரிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் அழகு உதட்டில் குறைவாகும் பட்சத்தில், அதனையும் பராமரிக்க முயற்சி எடுப்பார்கள். இவர்கள் சிலநேரம் செயற்கையான பூச்சுகளை தேர்வு செய்வது இயல்பு.

ஆனால், தோல் மருத்துவர்களிடம் நாம் இதுகுறித்து பேசும்போது, "உதடுகளில் இறந்த நிலையில் இருக்கும் செல்கள் அவ்வப்போது அகற்றப்பட வேண்டும். இறந்த செல்கள் அகற்றப்பட்டால் மட்டுமே உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

ஸ்பூனில் சிறிதளவு சர்க்கரையை ஜெல்லியுடன் கலந்து உதட்டில் தேய்த்து, பின் சிறிதுநேரம் கழித்து இளம் சூடுள்ள நீரை கொண்டு கழுவ வேண்டும். நமது பல்துலக்கும் பிரஸ்ஸில் சிறிதளவு சர்க்கரையை எடுத்து உதடுகள் மீது தேய்த்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கும். Trending Video: கெத்து காண்பிப்பதாக நினைத்து கை-கால்களில் கட்டுபோடும் நிலைக்கு ஆளான இளசுகள்; சில்வண்டு பைக் ரைடர்களே கவனம்..! 

கொத்தளவு ரோஜா இதழ்களை அரைத்து, சிறிது தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றினை நன்கு கலக்கி உதட்டில் தேய்க்க, உதட்டின் கருமை மறையும். இதனை அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரம் ஒருமுறை செய்தால் போதுமானது.

சர்க்கரை, எலுமிச்சை சாறு, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை சிறிதளவு கலந்து உதடுகளின் மீது பூசி, அரைமணிநேரம் கழித்து பாலுடன் மென்மையான துணிகொண்டு தேய்த்து கழுவ உதட்டில் இறந்த செல்கள் நீங்கி மென்மைத்தன்மை ஏற்படும்.

ரோஜா இதழ் பொடியுடன் சாக்லேட் பவுடர், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து உதட்டின் மீது பூசி அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் வெடிப்பு குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

உதட்டின் அழகை பராமரிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இம்முறையை மேற்கொள்ளலாம். அதேபோல, லிப்ஸ்டிக் போன்ற ரசாயனங்களுக்கு பதில் பீட்ரூட் உபயோகம் செய்யலாம். உடலை வறட்சி இன்றி பார்த்துக்கொண்டாலே உதடுகளுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.