ஏப்ரல் 13, (Summer Tips): தமிழ் புத்தாண்டின் தொடக்கமாகவும், ஆங்கில நாட்காட்டியில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாதமும் வெயில் இந்தியாவை வாட்டி வதைக்கும் (Summer Season). கோடைகாலத்தில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு (Children) விடுமுறையும் அளித்துவிடுவார்கள். ஆதலால் அவர்கள் வீட்டிற்குள் சில நாட்கள் முடங்கிவிட்டு, பின் ஊரைசுற்றிப்பார்க்க ஆசைப்படுவார்கள்.
இவ்வாறான குழந்தைகள் சில நேரம் தங்களின் நண்பர்களுடன் காலை சென்றுவிட்டு வெயில் அதிகரிப்பதற்கும் வருவார்கள். சில சமயம் காலை சென்றால் காடெல்லாம் தண்ணீர் கூட இன்றி விளையாடிவிட்டு மாலை தான் வருவார்கள். குழந்தைகளுக்கு கோடையில் சாதாரண தண்ணீரை அவ்வப்போது குடிக்க தொடர்ந்து தண்ணீர் கொடுக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக 10 கி எடையுள்ள குழந்தை 1 லிட்டர் நீரையாவது அன்றைய நாளில் குடித்திருக்க வேண்டும். அதேபோல, குழந்தைகளின் எடைக்கேற்ப நீர் பருக வேண்டும். குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை 10 நிமிடம் நீரில் ஊறவைத்து கழுவி கொடுக்கலாம். CSK Vs RR: பந்துவீச்சில் சொதப்பிய சென்னை அணி வீரர்கள்; வைடு பந்துகளுக்காக 10 ரன்கள் கூட்டிகொடுத்த பரிதாபம்.!
செயற்கையான தயாரிப்பு குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், மோர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பதநீர், நுங்கு, வெள்ளரிப்பழம் போன்றவற்றை சாப்பிட வழங்கலாம் அல்லது சாறாகவும் வழங்கலாம். கோடை காலத்திலும் நாட்டு அல்லது பிராய்லர் கோழி எடுப்பதை தவிர்த்து, மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டன், மீன் போன்றவற்றை வாங்கி சாப்பிட கொடுக்கலாம்.
துரித உணவகத்தில் இருந்து ரசாயனம் மிகுந்த உணவுகளை சாப்பிட பகல் வேளையிலும், இரவு வேளையிலும் வழங்க வேண்டாம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும் கை, கால்களை நீரில் சுத்தம் செய்து வர பழக்க வேண்டும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த தடுப்பூசியை கால இடைவெளியில் சரியாக செலுத்த வேண்டும்.