Eye Protection (Photo Credit: Eyesonbrickell.com)

மார்ச் 09: நம் கண்களை கவனமாக (Eye Protection) பராமரிக்க நமது உணவுகளில் பண்ணைக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை, கறிவேப்பில்லை கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை தினமும் ஒரு கீரை என உணவில் சேர்க்கலாம். அதேபோல கேரட், பப்பாளி (Papaya), பாதாம், மீன், முட்டை போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பொன்னாங்கண்ணி கீரையை உணவில் சேர்க்கும்போது, புளி சேர்க்காமல் சமைத்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் கண்களின் பார்வை மேம்படும், கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். Adv Shukkur Remarriage: 28 ஆண்டுகள் கழித்து மகள்களுக்காக மறு திருமணம் செய்த தம்பதி.. காரணம் என்ன தெரியுமா?..!

இரவு வேளைகளில் உறங்குவதற்கு முன் இரண்டு உள்ளங்காலில் நடுவில் பசுநெய் தேய்த்து உறங்கலாம். இரவு நேர உணவுக்கு பின் உறங்குவதற்கு முன் திரிபலா சூரணம் சாப்பிடலாம். தினமும் இரவில் 9 மணிக்கு உறங்கி, அதிகாலை 5 மணிமுதல் எழுவது, தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.