Zomato Veg (Photo Credit: @Deepigoyal X)

மார்ச் 19, டெல்லி (Delhi): இந்தியாவில் பிரதான உணவு டெலிவரி நிறுவனமாக இருப்பது சோமெட்டோ (Zomato). வீட்டில் இருந்தபடி தங்களுக்கு தேவையான உணவை செயலின் மூலம் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில், வீட்டிற்கு வந்து அது நேரடியாக டெலிவரி செய்யப்படும். அதேபோல, நாம் ஆர்டர் கொடுத்த 30 முதல் 40 நிமிடங்களுக்குள், உணவு கைக்கு வரும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர்.

பல்வேறு செயலிகள் ஆன்லைன் உணவு டெலிவிற்காக செயல்பட்டு வருகிறது எனினும், சோமெட்டோ அதிக பயனர்களை கொண்டது ஆகும். இதற்காக ஒவ்வொரு நகரிலும் பிரத்தியேகமாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சோமெட்டோவில் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூய வெஜ் பயன்முறையானது சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும், மேலும் அசைவ உணவுப் பொருட்களை வழங்கும் அனைத்து உணவகங்களையும் விலக்கும். Pure Veg Fleet இந்த சுத்தமான வெஜ் உணவகங்களில் இருந்து ஆர்டர்களை மட்டுமே வழங்கும்.