Foods For A Healthy Sex (Photo Credit: Pixabay)

ஜூன் 19, சென்னை (Health Tips): ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு மனதளவில் காதல் போதும் என்றாலும் உடலளவில் பல தேவைகள் இருக்கின்றன. பாலியல் உறவில் சுகாதாரமும், ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு முறைகளும் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அவசியமானதாகும். பழங்கள், காய்கறிகள், முழு தனியங்கள், பருப்பு மற்றும் சிறுதானிய உணவுகள் போன்ற ஊட்டசத்துக்களும், கொழுப்புகளும் நிறைந்த உணவு முறைகள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் மோசமான உணவுப் பழக்கமும் உடலுறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உடலுறவிற்கு ஏற்ற உணவுகள்: பொதுவாகவே மனித உடல் உறுப்பு வடிவத்தில் அல்லது நிறத்தில் இருக்கும் காய்கறி பழங்கள் அந்த உறுப்புகளுக்கு நன்மையளிக்கும் விதத்தில் உள்ளது. உதாரணமாக மூளைக்கு வால்நட், இதயம் ஆப்பிள். இதே போல் உடலுறவிலும், வாழைப்பழம், சிப்பி, அவக்கேடோ, கேரட், அத்திப்பழம் போன்ற உணவுகள், பாலியலுக்கு ஏற்ற புரதச்சத்துக்களை அளிக்கிறது. மேலும் துரித உணவுப் பழக்கம் பாலியல் ஈடுப்பாட்டைக் குறைப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

பாலியல் உறவில் ஆண்களுக்கு, விரைப்பு தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைவாக இருக்கும். இது வயதாவதாலும், மனச்சோர்வு, மது மற்றும் புகை பழக்கத்தாலும், நீரிழிவு நோய், உடல் பருமன், போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், ஆணுறுப்பில் இரத்தவோட்டம் தடைபட்டு விரைப்புத் தன்மை குறைந்துவிடும். ரத்தக்குழாய்களையும், ரத்தவோட்டத்தைப் பொருத்து தான் ஆண்களின் விரைப்புத் தன்மை இருக்கும்.

விரைப்புத் தன்மையை உணவு முறைகளிலேயே அதிகரிக்க முடியும். இதற்கு வைட்டமின் பி3, பி12, ஜிங்க் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது நரம்பு மண்டலத்தில் ரத்தவோட்டத்தை அதிகரித்து சீராக்குகிறது. பச்சை காய்கறிகள், முருங்கை, முட்டை, தண்ணீர் விட்டான் கிழங்கு, மரவள்ளி கிழங்கு, மீன் போன்றவை நீண்ட நேர பாலியல் உறவிற்கு உதவி புரிபவை.

பெண்களுக்காக: பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவதால் உடலுறவில் ஈடுபடும் போது வறட்சி தன்மை ஏற்படும். இது பெண்களுக்கு வலியை ஏற்படுத்தி, இருவருக்குமான பாலியல் உறவை பாதித்து விடும். இந்த பெண்ணுறுப்பு வறட்சித் தன்மை, மனசோர்வு,கருப்பை மற்றும் மாதவிடாய் பிரச்சனை, இணைநோய் உள்ளவர்கள், மது புகை பழக்கம் உள்ளவர்களுக்கு இது ஏற்படும். TN Weather Update: செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

பெண்களுக்கு சோயா, அவக்கேடோ, சர்க்கரைவள்ளி கிழங்குகள் வெஜைனல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் பிடா கரோட்டின், மற்றும் ஃபைபர்கள் ஈஸ்ரோஜனை அதிகரித்து இன்சுலினையும் பராமரிக்கிறது. மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், கிவி, ஸ்ட்ராபெரி, நட்சத்திரபழம், அத்தி போன்ற பழங்கள் பெண்களுக்கு வறட்சி தன்மையை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதிமதுரம், பாதாம், மேலும் கீரை வகைகள் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த வோட்டத்தை சீர்படுத்துகிறது.

உலர் மற்றும் விதை உணவுகள்: பாதாம், வால்நட், முந்திரி போன்றவை உடலுறவு செய்பாட்டை வலுபெறச் செய்கிறது. மேலும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ஒமேகா புரதச்சத்து அதிகமுள்ள பப்பாளி, ஆளி, மற்றும் சூரிய காந்தி விதைகள், இயற்கையாகவே பாலியல் செயல்பாட்டை அதிகரிக்கும் திறன் கொண்டவை.

ஹார்மோனுக்கான உணவுகள்: பால், அஸ்வகந்தா, கடல் உணவுகள், காளான் போன்றவை ஆரோக்கிய பாலியல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். சாக்லேட், ஒயின், குங்குமப்பூ போன்றவை பாலியல் உணர்வை தூண்டும் ஹார்மோனை அதிகரிக்கிறது. குறிப்பாக டார்க் சாக்லேட், மூளையில் எண்டார்ஃபின் மற்றும் செரட்டோனின் என்னும் மகிழ்ச்சியை அளிக்கும் ஹார்மோனை தூண்ட உதவுகிறது. இதனால் தாம்பத்திய உறவு ஆரோக்கியமாக இருக்க உதவி புரிகிறது.

உடற்பயிற்சி: ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டாலும், உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திக்க வேண்டும். உடலுறவில் ஈடுபடும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதனால் இதயத்தை வலுபெற தினமும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியமான ஒன்று. குறைந்தது ஒரு மணி நேரம் நடைப் பயிற்சியிலாவது ஈடபாட வேண்டும். முதுகு மற்றும் இடுப்பு எலும்புகளையும் வலுபெற செய்ய வேண்டும். உடல்பயிற்சி செய்து உடலை வலுவாக வைத்திருப்பது ஆரோக்கியமான பாலியில் உறவில் மிக முக்கியாக ஒன்றாகும்.