iPhone Survives 16,000 Feet Drop (Photo Credit: @aviationbrk X)

ஜனவரி 8, அலாஸ்கா (Alaska): ஐபோன் என்றாலே ஒரு ஸ்டேட்டஸ் எனும் நிலை உருவாகி இருக்கிறது. பொதுவாகவே ஐபோன் வாங்க வேண்டும் என்றால் கிட்னியை விற்க வேண்டும் என்ற ஜோக் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஐபோன் (iPhone) என்றாலே அதிக விலை என்ற வார்த்தை தான் எல்லோரின் மனதிலும் முதலில் தோன்றும். அடுத்தபடியாக மனதில் தோன்றும் வார்த்தை என்றால் அது "பாதுகாப்பு" (Protection) என்ற வார்த்தையாக தான் இருக்க முடியும். இந்நிலையில் ஐபோன் என்றால் நமக்கு பலம் என்று தோன்றும் வகையில் மற்றொரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Chennai Police Arrests: சென்னையில் திருட்டு வழக்குகளில் 24 பேர் கைது... சிறுவர்களும் கைது..!

16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஐபோன்: எதிர்பாராவிதமாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஏஎஸ்ஏ 1282 (Alaska Airlines ASA 1282)  விமானத்தின் கண்ணாடி உடைந்ததால், விமானத்தில் இருந்த சிறிய பொருட்கள் பல நடுவானில் இருந்து கீழே விழுந்துள்ளன. அப்போது தொலைபேசிகளும் நடுவானில் இருந்து விழுந்துள்ளன. இந்த விமானம் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு பறந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால், அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன் ஒன்று, எந்த ஒரு சின்ன ஸ்க்ராட்ச் (Scratch) கூட இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது. பார்ன்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சீநாதன் பேட்ஸ் என்பவரால் ஐபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் SOS பயன்முறையுடன் ஃபோன் விமானத்தில் செயல்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தும் போன் எந்த ஒரு சேதாரமும்மின்றி, நல்ல முறையில் இருப்பது உலக அளவில் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.