ஜூன் 23, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இப்போட்டியில், இந்தியா 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அப்போது, கிரீஸில் விளையாடிக் கொண்டிருந்த சாய் சுதர்சனிடம் (Sai Sudharsan) சீனியர் வீரரான கேஎல் ராகுல் (KL Rahul) தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், 'நல்லா பவுன்ஸ் இருக்கு மச்சி' என கேஎல் ராகுல் பேசியுள்ளார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. CSG Vs TGC: சேப்பாக் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. சேப்பாக்கின் ஆதிக்கம் தொடருமா..?
வீடியோ இதோ:
KL to Sai : நல்ல Bounce இருக்கு மச்சி. 🗣🤩
📺 தொடர்ந்து காணுங்கள் | England vs India | 1st Test | Day 03 | நேரலை | JioHotstar-ல்#ENGvIND #TeamIndia pic.twitter.com/5Zt9Gz9Q2j
— Star Sports Tamil (@StarSportsTamil) June 22, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)