Boat | Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 15, ராமநாதபுரம் (Ramanathapuram News): தமிழகத்தில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடைகாலம் நேற்று (ஜூன் 14) முடிவடைந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 15) அதிகாலையிலேயே மீனவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர். அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் மேற்குவாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, விசைப்படகில் 5 மீனவர்கள் சென்றுள்ளனர். OnePlus 12R Offer Sale: அதிரடி சலுகையில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போன் விற்பனை..! முழு விவரம் உள்ளே..!

அப்போது, விசைப்படகு சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால், கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விசைப்படகில் இருந்த 5 மீனவர்களில் 2 பேர் மற்றொரு படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக (Fishermen Death) உயிரிழந்துவிட்டனர். அதில், 2 பேரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆரோக்கியம், பரகதுல்லா ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.