Liquor Crime File Pic (Photo Credit: Pixabay)

மே 21, பெரம்பூர் (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சாராயம் கடத்தப்படுவதாக (Liquor Smuggling) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பெரம்பூர் தலைமை காவலர் நாகவல்லி தலைமையிலான காவல்துறையினர் வழுவூர் பகுதிக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். Northerners Attacking The Banana Seller: வாழைப்பழ வியாபாரிக்கு கத்திரிக்கோலால் சரமாரி தாக்குதல்; வடமாநில இளைஞருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!

இந்நிலையில், வழுவூர் ரயில்வே கேட் அருகே வந்த கார் ஒன்றை மறித்து நிறுத்தினர். அப்போது, காரை ஓட்டி வந்த நபர், காவல்துறையினரை கண்டதும் காரை அதே இடத்தில் விட்டுவிட்டு, உடனே அங்கிருந்து தப்பியோடினார். இதனையடுத்து, காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக சுமார் 800 லிட்டர் சாராயம் இருந்தது. இவை காரைக்காலில் இருந்து கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம் மூட்டைகள் அனைத்தையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.