ஜூன் 25, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) அளித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சுரேஷ் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். High Court Grants Bail To Minor Boy: புனே போர்ஷே கார் விபத்து; குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
இதுதொடர்பான வழக்கு விசாரணை, நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுந்தரய்யா இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். இதில், சுரேசுக்கு 2 பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது. போக்சோ பிரிவு 7,8-யின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், பிரிவு 9, 10-யின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, 5 ஆண்டுகள் சுரேசுக்கு தண்டனை காலமாக கருதப்படும் என அரசு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.