மார்ச் 12, உடுமலை (Tiruppur News): திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் பழைய ராஜவாய்க்கால் கரையில் தொழிலாளி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து கிடந்தார். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுகுறித்த விசாரணையில் இறந்துபோன நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் சாமிதுரை (வயது 42) என அறியப்பட்டது. A Woman Death: கள்ளத்தொடர்பை மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை – கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
மேலும், சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது பிரேத பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் மூலம் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 34) மற்றும் பாலபூபதி என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 26) இருவரும் இணைந்து சாமிதுரையை அடித்துக்கொலை செய்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் மூவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் ராமகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் இருவரும் இணைந்து மது பாட்டிலை கொண்டு சாமிதுரையை அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார். இவர்கள் இருவரும் அவரை அங்கேயே விட்டு சென்றுவிட்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்ததை அடுத்து, ராமகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த குமரலிங்கம் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தார்.