மார்ச் 28, ஈரோடு (Erode): மதிமுகவின் (MDMK) முன்னாள் பொருளாளரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி (Ganeshamoorthy) இன்று காலை உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Thailand Parliament Legalise Same Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!

வைகோ, மதிமுகவை உருவாக்கியபோது, அன்று அவருடன் இருந்த பல தலைவர்கள், இன்று கட்சியை விட்டுப் பிரிந்து பல்வேறு கட்சிக்குப் போயிருந்தாலும், அப்போதிருந்து தற்போதுவரை அவர் கூடவே இருந்தது கணேசமூர்த்தி தான். இதனால் இவரது திடீர் மறைவு வைகோவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.