ஜூலை 22, பள்ளப்பட்டி (Salem News): சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளப்பட்டி ஏரி அமைந்துள்ளது. தற்போது, பள்ளப்பட்டியில் ஏரியை (Pallapatti Lake) புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு திடீரென தீ விபத்து (Fire Accident) ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களை கவரும் வகையில் புனரமைக்கப்பட்டது. Businessman Died of Heart Attack: உடற்பயிற்சி செய்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வைரல்..!
மேலும், இந்த ஏரியில் படகு சவாரியும், குழந்தைகளை கவரும் வகையில் பூங்கா (Park) மற்றும் மலைகள் போன்ற வடிவமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏரியின் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 22) பூங்காவிற்கு பொதுமக்கள் வழக்கமாக சென்றுகொண்டிருந்த நிலையில் திடீரென மதியம் 2 மணியளவில், மலைகள் போன்று வடிவமைக்கப்பட்ட பகுதியில் இருந்து புகை வெளியேறியது.
இதனையடுத்து தீ மளமளவென பிடித்து எரிந்து மலை வடிவமைப்பு முழுவதும் பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்றனர்.