Man Dies Of Burns (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 02, திண்டுக்கல் (Dindigul): திண்டுக்கல் ஆர்.எம்.காலணியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவருக்கும் எருக்கம் பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் இடையே முன் விரோதமானது இருந்துள்ளது. ‌ அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சரவணகுமார் சதீஷுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கிடையை சண்டை பெரிதாகி உள்ளது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் தனது தம்பி பிரேம்குமாருடன் இணைந்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்ற சதீஷை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். Road Accident: லாரி மோதி 2 குழந்தைகள் பலி.. கோயிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்!

ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் எரித்து கொலை செய்தது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் ஏ.எஸ்.பி.விபின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.நகர் எருமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சரவணகுமார் ஆகிய 2 பேரை, 7 மணி நேரத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.