ஜூன் 17, தூத்துக்குடி (Tuticorin News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (Housing Board Residence) உள்ளது. இங்கு 400-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இதில், மூன்றாவது மாடியில் ஆதிராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ஆதிராஜின் மகன் அருண் பாண்டியன் வீட்டின் அறையில் கட்டிலில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். SL Vs NED Highlights: இலங்கை அணி அதிரடி ஆட்டம்; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி..!
அப்போது, நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து (Roof Collapse) அருண் பாண்டியன் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவசர ஊர்தியின் மூலம் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு அங்குள்ள பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.