ஜனவரி 31, நீலாங்கரை (Chennai News): தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சியான தமிழக வெற்றிக்கழகம், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் அதன் தலைவர் முழுமுனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் அதன் தலைவர் விஜய் தலைமையில், விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjunan), அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். வானிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
விசிக-வில் இருந்து விலகிய ஆதவ்:
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சர்ச்சை பேச்சுக்களால், அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலரும், கூண்டோடு தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் ஆதார் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும், நிர்மல் குமாருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஆதவ் அர்ஜுனா, ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ஆதரவாக பேசியதுடன், திமுகவை கடுமையாக சாடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.