Ladislaus Chinnadurai (Photo Credit: @backiya28 X)

ஏப்ரல் 11, திண்டுக்கல் (Dindigul News): இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழ்பவர் தான் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் (Abdul Kalam). பொருளாதார ரீதியாக பின் தங்கிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளிக்காலத்திலேயே குடும்பத்தின் நிலை கருதி, பேப்பர் போடுவது என பணிகளை மேற்கொண்டு வந்தார். மேலும் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்த அப்துல் கலாம், 1955 ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார். Happy Ramadan 2024: பிறை இருள் வெளிச்சத்தின் முதல் தொடக்கம்.. இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்..!

அங்கு அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பொது அவருக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த ஆசிரியர் அருள்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை (Ladislaus Chinnadurai). இந்தநிலையில் 101 வயதான லடிஸ்லாஸ் சின்னத்துரை வயதுமூப்பு காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். இவருக்கு இறுதிச் சடங்குகள் இன்று மாலை 3 மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.