Police Station file pic (Photo Credit: wikipedia)

மார்ச் 21, சாயல்குடி (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கஞ்சா, பீடி இலைகள், மாத்திரைகள், தங்கம் போன்றவை அடிக்கடி கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இலங்கையில் இருந்தும் ராமநாதபுரத்திற்கு கடல் வழியாக சட்ட விரோதமாக கடத்தல்கள் நடைபெற்று வருகிறது. Sexual Harassment: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியையின் கணவர் – போக்சோவில் கைது..!

இந்நிலையில், கடலோர காவல் படையினர் கடத்தல்களை தடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த போவதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியாக வந்த சரக்கு லாரியை காவல்துறையினர் மறித்துள்ளனர். உடனடியாக லாரி ஓட்டுநர் மற்றும் அதிலிருந்த சிலர் லாரியை விட்டு இறங்கி ஓடித் தப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அதில் 70 மூடைகளில் 30 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்த முயன்ற பீடி இலைகளையும், அதை ஏற்றி வந்த சரக்கு லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை அதிகாரி பெருமாள் அவர்கள் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களையும் அதற்கு மூலக்காரணமாக இருந்தவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.