Road Accident (Photo Credit: Pixabay)

ஜனவரி 06, இடுக்கி (Kerala News): கேரள மாநிலம், இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள புல்லுப்பாறை அருகே அரசு பேருந்து (Govt Bus Accident)வளைவில் திரும்பும் போது, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Kannur Doctor Arrested: மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி உல்லாசத்துக்கு அழைப்பு; மருத்துவரை பொறிவைத்து பிடித்த பெற்றோர்.!

பலர் படுகாயம்:

இந்த விபத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து, மாவேலிக்கரையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி கொண்டிருந்த போது, விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. மேலும், பேருந்து வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து, விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.