Union Budget 2025 Expectations (Photo Credit: LatestLY)

பிப்ரவரி முதல் நாளில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2025 மக்களவைத் தேர்தலுக்கு பின்பாக மோடி அரசு 3.0-வின் இரண்டாவது முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். மத்திய பட்ஜெட்டில் பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பட்ஜெட் தாக்குதல் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் எதிர்பார்க்கும் சில வரி விலக்கு வரம்பு உயர்வுகள், வேலைவாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரியில் மாற்றம்:

பட்ஜெட்டில் வருமான வரி சட்டத்தின் கீழ் மக்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அரசு பெரிய நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய வரி முறையில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால் அதற்கு 5 சதவீதம் வரி, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. TN Assembly 2025: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 2025.. அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்..!

தனிநபர் கடன் :

கல்விக்காக வாங்கிய கடனில் வட்டிக்கு விரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிநபர் கடனிற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. இதிலிருந்தும் தளர்வுகள் இருக்கும் என வருமான வரி செலுத்துவோர் எதிர்பார்க்கிறார்கள். மேலும் குழந்தைகளின் கல்வி கட்டணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு எழும்புகிறது.

பங்குசந்தை வரிவிலக்கு:

சாமானிய மக்கள் சேமிப்புக்குத் தேர்வு செய்யும் முக்கியான வழியாக பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. இருந்தாலும், அவற்றின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. சேமிப்பில் கிட்டத்தட்ட 15% FD-களுக்குக் கிடைக்கிறது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி பங்குகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேலைவாய்ப்பு:

கொரோனாவிற்கு பிறகும் சமீப காலத்திலும் பல்வேறு மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் இந்த பட்ஜெட்டில் நாட்டுமக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தர அரசு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. HMPV Virus in India: இந்தியாவில் ஹச்எம்பிவி வைரஸ்; 8 மாத குழந்தைக்கு பாதிப்பு..!

மருத்துவ காப்பீடு:

அனைத்து எதிர்பார்ப்புகளில் முக்கியமானதாக இருக்கிறது இது. 80டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டிற்கான வரி விலக்கு தொகையை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்க நடுத்தர வர்க்கத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என்றும் பலர் எதிர்பார்க்கின்றனர். மேலும் இது போல இரசாயனத்துறை மற்றும் மின்சார வாகன உற்பத்தி போன்ற தொழிற்துறையை ஊக்குவிக்க மானியம் வழங்கும் என்றும் கருத்துகள் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முந்தைய பட்ஜெட்கள் எதுவும் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் இல்லை என்று கூறுகின்றனர். எனவே தற்போதைய மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற பேச்சு பரவலாக உள்ளது.