Bigg Boss Tamil Season 8 | Manjari (Photo Credit: @BiggBossVignesh / @monsterr_mk X)

ஜனவரி 05, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 88 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, ராணவ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Bigg Boss Tamil Season 8: டிக்கெட் டு பினாலே முடிவு.. பிக் பாஸ் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா?! 

இன்று மஞ்சரி வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு?

இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து மஞ்சரி வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மக்கள் வாக்குகளின் அடிப்படையில், மஞ்சரி இன்று பிக் பாஸ் தமிழ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று ராணவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பு பெற்றுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இன்னும் 2 வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவிருக்கிறது. டிக்கெட் டூ பின்னாலேவுக்குக்கான நேரடி இறுதிக்கட்ட நபர் ராயனாக இருக்கலாம் எனவும் தெரியவருகிறது. போட்டியில் வென்ற ராயனுக்கு, முதல் நாளுக்கு பின்னர், விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அந்த டிக்கெட்டை கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.