ஜனவரி 06, சென்னை (Special Day): உலகப் போர் அனாதைகள் தினம் முதலில் பிரெஞ்சு அமைப்பான SOS Enfants en Deters ஆல் தொடங்கப்பட்டது. உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன. 6ல் உலக போர் அனாதை தினம் (World Day of War Orphans) கடைபிடிக்கப்படுகிறது. Food Poison: புட் பாய்சன் ஏற்படுவது எதனால்? தவிர்க்கும் வழிமுறைகள் என்ன?..
இஸ்ரேல் ஹமாஸ் போர்:
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45, 028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின்போது அனாதையாகப் போன எண்ணற்ற குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எல்லா வகையிலும் பங்களிக்க இன்னாள் கடைபிடிக்கப்படுகிறது.