Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 06, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. வானிலை: மக்களே ரெடியா! தொடரும் வடகிழக்கு பருவமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இன்று (06.01.24) ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.5,960-க்கும் ஒரு சவரன் ரூ.47,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.