ஜனவரி 05, சென்னை (Chennai): நாம் தினமும் நமது வயிற்றுக்கு உணவை உணவாக எடுத்துக்கொண்டாலும், மருந்தாக எடுத்துக்கொண்டாலும் அதன் அளவு என்பது முக்கியம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது நமது வழக்கில் உள்ள பழமொழி. சாதாரண உணவுகளை எப்போதும் அளவுடன் சாப்பிட வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நாம் உண்ணும் உணவின் அளவு, மதியம் சாப்பிடும் வரை சரியாக இருக்குமா? இன்று காலை 2 இட்லி சாப்பிட்டால், மறுநாள் அதே அளவு சாப்பிட வேண்டும் என்ற வரைமுறையை பலரும் வரைந்துள்ளனர். உணவு தனது இடத்தை வயிற்றுக்குள் பிடித்துவிட்டது என்றால், நமக்கு போதும் என்ற உணர்வை கொடுத்துவிடும். உடலின் தேவை, செரிமாணத்தன்மையை பொறுத்து பசி, அளவு தீர்மானிக்கப்படுகிறது.
அளவு முக்கியம் குமாரு:
அளவுடன் சாப்பிட்டால் வயிறு கனமான உணர்வை ஏற்படுத்தாது. சாப்பிட்டதும் ஏற்படும் களைப்பும் இருக்காது. முந்தைய வேளையை போல சுறுசுறுப்புடன் பணிகளை தொடரலாம். இன்றளவில் உள்ள காலகட்டத்தில் நாம் உணவுகளை நேரமின்மை உட்பட பல்வேறு காரணங்களால் அவசர அவசரமாக சாப்பிட்டு செல்கிறோம். ஒருசிலர் அதனையும் செய்வதில்லை. மேலும், குளிர்சாதன பெட்டியில், கடந்த வாரம் சமைத்த உணவின் மீதத்தை கூட பதப்படுத்தி சாப்பிடுகிறோம். Kalyana Veetu Vatha Kulambu: கல்யாண வீட்டு வத்தக்குழம்பு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
புட் பாய்சனுக்கான காரணங்கள்:
இவ்வாறான செயல்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது ஆகும். நாம் உணவுக்காக சமைக்கும் காய்கறி, அதனை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, சமைத்த உணவை பதப்படுத்தல் இருப்பது, தட்டை கழுவாமல் பயன்படுத்துவது, அதிக டிடர்ஜண்ட் சோப்களை பயன்படுத்தி சரிவர தட்டை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது போன்றவை புட் பாய்சன் எனப்படும் உணவு ஒவ்வாமைக்கு வழிவகை செய்யும். முதலில் நமக்கு புட் பாய்சன் ஏற்பட்டுவிட்டது என்றால் அதன் தொடக்கம் வயிறுவலி மற்றும் வயிறு மந்தம் ஆகியவை ஏற்படும். பின் குமட்டல், தலைவலி, காய்ச்சல் போன்ற உணர்வு இருக்கும். பின் வயிற்றுப்போக்கு வாந்தி என ஏற்படத் தொடங்கும். இதனால் இவ்வாறான அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. வயிற்றுப்போக்கு உணவில் உள்ள விஷத்தை வெளியேற்றும் என்றாலும், அதன் தன்மை அதிகமானால் உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
தடுக்கும் வழிமுறை:
உணவை சமைப்பவர், சாப்பிடுபவர் என இருவரும் தங்களின் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் அறைகளை சுத்தமுடன் கவனிக்க வேண்டும். சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்தி, பலகை என அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழங்கள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்தும் முன்னர், அதனை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். பிரிட்ஜில் உணவை வைத்து பயன்படுத்த நேர்ந்தால், அதில் உள்ள குளிர் நீங்கும் வரை வெளியில் வைத்திருக்க வேண்டும். பிரிட்ஜில் உணவுகளை சேகரித்து பயன்படுத்துவோர், தனித்தனி பாத்திரத்தில் சேகரித்து பயன்படுத்த வேண்டும். அதேபோல, அதிகபட்சம் 2 நாட்களே அதிகமானது. அதற்கு மேல் உணவுகளை பதப்படுத்தி சாப்பிட்டால், கட்டாயம் பின்விளைவுகள் இருக்கும். உணவில் லேசான துர்நாற்றம் இருந்தாலும், அதனை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். செல்லப்பிராணியிடம் இருந்து உணவுகளை தள்ளிவையுங்கள்.