Virus (Photo Credit: Pixabay)

ஜனவரி 06, பெங்களூரு (Karnataka News): உலகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது. தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் மற்றும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன. இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். China's New Virus: "மீண்டும் மீண்டுமா" சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..!

குழந்தைக்கு வைரஸ் தொற்று:

இந்நிலையில், தற்போது இந்தியாவில் முதல் நபர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு, எந்தவிதமான வெளிநாட்டு பயணமும் இல்லாத சூழ்நிலையிலும் அக்குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தைக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்துதான் மேற்கொண்டு, எப்படி பாதிப்பு இருக்குமென உறுதிப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அச்சப்பட தேவையில்லை:

HMPV வைரஸ் என்பது கொரோனா போலவே மூச்சுக்குழாயை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா போல அச்சப்பட தேவையில்லை என சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர். எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.