அக்டோபர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று (29-10-2025) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியை காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (30-10-2025) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணிநேரத்திற்கு, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும். Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
இன்றைய வானிலை (Today Weather), நாளைய வானிலை (Tomorrow Weather):
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-10-2025) முதல் 04-11-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-11-2025 அன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (30-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (31-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.