Courtallam Waterfalls (Photo Credit: Facebook)

மார்ச் 16, தென்காசி (Tenkasi News): தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக மக்கள் அனைவரும் நீர்நிலைகளை தேடி செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் நீர் நிலைகளிலும் நீரின் அளவு குறைந்துள்ளது. Australian Cricket Player Retirement: முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்..!

இந்தநிலையில், தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாதளமாக பார்க்கப்படும் குற்றால அருவி தற்போது வறண்டு காணப்படுகிறது. கொளுத்தும் வெயிலால் நீர்வரத்து குறைந்து அருவிகள் வறண்ட நிலையில் உள்ளன.

மேலும், மற்ற சுற்றுலா தளங்களான மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.