Senthur Express (Photo Credit: @LokmatTimes_ngp X)

டிசம்பர் 20, திருநெல்வேலி (Tirunelveli): குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில்(Senthur Express) மூன்று நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆனால் ரயிலின் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்திவிட்டார். இருப்பினும் ரயில் நிலையத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் வெளியேறத முடியாத நிலை உள்ளது.

300 பயணிகள் மீட்பு: அதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியானது தொடங்கியது. தொடர்ந்து 300 பயணிகள் மீட்கப்பட்டனர். ஆனால் திடீரென 500 பயணிகளை மீட்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருகியுள்ளது. இதனால், பயணிகள் ரயில் நிலையத்திலேயே தவித்து வருகின்றனர். மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க இயலாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. Mitchell Starc IPL bid: அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்... வரலாறு படைத்த ஸ்டார்க்!

3 நாளாக சிக்கி தவிக்கும் 500 பயணிகள்: தொடர்ந்து, முன்னுரிமையின்பேரில் ரயிலில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டனர். அதன்படி கர்ப்பிணி பெண் மற்றும் சிறுவர், சிறுமியர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டனர். கனமழை தொடர்ந்து பெய்துவந்ததால், சாலையில் உடைப்பு ஏற்பட்டு பயணிகளை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று மழை வெறித்திருப்பதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.