டிசம்பர் 26, திருநெல்வேலி (Tirunelveli News): தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் அதீத மழை கொட்டி தீர்த்தது. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் பல பகுதிகள் மீளவில்லை. பல இடங்கள் இன்னமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்குள்ளவர்களை மீட்கும் பணியானது இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகப்படியான தண்ணீர் தேங்கி இருப்பதால் தொற்று பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!
தட்டம்மை தடுப்பூசி: இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான தென் மாவட்டங்களில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி (Measles Vaccine) செலுத்த உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் மொத்தம் எட்டு லட்சம் சிறார், குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு தரப்பில் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் அனைத்து சிறார்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பணியானது வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.