Pocso Act (Photo Credit: @BarBench Twitter)

ஆகஸ்ட் 09, விருத்தாசலம் (Cuddalore News): கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியராக (School Headmaster) கடலூரை சேர்ந்த எடில் பெர்ட் ஃபெலிக்ஸ் (வயது 45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர், மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. இதனைப்பார்த்த அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் நேற்று (ஆகஸ்ட் 08) பள்ளிக்குச் சென்றுள்ளனர். TN Govt Bus: வார இறுதியில் சொந்த ஊர் போறிங்களா?.. அசத்தல் குட் நியூஸ் இதுதான்..! விபரம் இதோ.!

அங்கு அவர்கள் தலைமையாசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸை சரமாரியாக தாக்கி ஆடைகளை கிழித்து, அரைநிர்வாணமாக சாலைக்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் தலைமை ஆசிரியரை மீட்டு பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதோடு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமையாசிரியரை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் அவர்களிடம் சமாதானம் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து (இன்று) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவெடுப்போம்” என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட பள்ளி தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.