ஜனவரி 12, மதுரை (Madurai): பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றது. அதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். Vijayakant X Name Changed: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்... பிரேமலதாவின் செயல்..!
ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயர்: எனவே அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி மதிப்பில், உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் (Kalaignar Karunanidhi centenary bull embracing arena) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் முடிந்த பிறகு, ஜனவரி 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என்ற ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ளார்.