Rains Cloud (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 02, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் நாளை முதல் ஏப்ரல் ஏழாம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (The Indian Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Ice Apple Kulfi Recipe: அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு ஒரு நுங்கு குல்ஃபி.. சுவையாக செய்வது எப்படி?.!

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.