டிசம்பர் 19, நாமக்கல் (Namakkal): நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த ஆண்டு மொத்தம் 379 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். Mitchell Starc IPL bid: அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்... வரலாறு படைத்த ஸ்டார்க்!
அன்பில் மகேஷின் அதிரடி அறிவிப்பு: பின்னர் பேசிய அன்பில் மகேஷ், "ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமூகம் சிறந்து விளங்க முடியாது. இப்படி முக்கிய பங்காற்றி வரும் ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம்" என்று பேசியுள்ளார்.