Cotton Candy (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 09, சென்னை (Chennai): புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விற்பனை செய்த பஞ்சு மிட்டாயில் (Cotton Candy), விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து பஞ்சுமிட்டாய்களை சோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வில் ரோடமின் பி (RHODAMINE-B) என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Bharat Ratna 2024: தமிழ்நாட்டுக்கே கெளரவம்.. பசுமைப்புரட்சியின் தந்தை, முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யப்படும் ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இளஞ்சிவப்பு, ஊதா நிற பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலும் புதுச்சேரியை போல் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.