மே 15, சேலம் (Salem News): சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டத்தில் கிராம பயிற்சி மேற்கொள்ளும் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவிகள் விதை உரக்கட்டு தொழில்நுட்பம் (Nutriseed pack technology) பற்றி அப்பகுதி விவசாயிகளுக்கு விளக்கினர். இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பம் மூலம் விதை 100% முளைப்பு தன்மையை பெறும் இந்த முறை அனைத்து விதைகளுக்கும் பொருந்தும்.
விதை உரக்கட்டு தொழில்நுட்பம் செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள் : விதை, இயற்கை உரம், செயற்கை உரம் மற்றும் மக்கும் தன்மையுள்ள காகிதம்.
செய்முறை: நம் எடுத்து உள்ள மக்கும் காகிதத்தில் இந்த விதையை வைத்து அதற்கு கீழே முதல் அடுக்காக இயற்கை உரத்தை வைக்க வேண்டும், இரண்டாவது அடுக்காக செயற்கை உரத்தை வைக்க வேண்டும். பின்பு அதனை ஒன்று சேர்த்து சிலிண்டர் வடிவத்தில் அந்த காகிதத்தை மடிக்க வேண்டும். அதன் நுனிப்பகுதியை பசையினால் ஒட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விதை உரக்கட்டு தயாராகிவிட்டது. இதனை பருவமழை வருவதற்கு முன் விதைக்க வேண்டும். Eye Brow: கர்ப்பப்பையை பலவீனப்படுத்தும் ஐ-ப்ரோ அழகு சிகிச்சை; மருத்துவர் கூறிய பரபரப்பு தகவல்.! பெண்களே உஷார்.!
பயன்கள்:
- நூறு சதவீதம் முளைப்பு தன்மையை கொடுக்கும்.
- வேர் பகுதி நன்றாக ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும், இதன் மூலம் ககளை தடுக்கலாம்.
- நோய் தாக்குதலை தடுத்து பயிர் நன்றாக வளர உதவும்.
- இயற்கை உரம் இருப்பதால் அது ஈரப்பதத்தை தக்க வைத்து பயிர் நன்று வளர உதவும்.